தலதா மாளிக்கைகு மேல் எவ்வித அனுமதியும் இன்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்த சந்தேக நபரொருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 42 வயதுடைய நபர் பங்களாதேஷ் பிரஜையாவார்.
குறித்த சந்தேகநபர் சனியன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.