தலவாக்கலை நகரை அண்மித்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தலவாக்கலை நகர வர்த்தகர்கள்,மற்றும் இளைஞர்கள் 26.11.2018 திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.1000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகர சுற்றுவட்டத்தில் கறுப்பு கொடிகளையும் பதாதைகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அமர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் உபதலைவர் பாரதிதாஸனும் கலந்துக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலவாக்கலை நகர வர்த்தகர்கள் கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். மேலும் தலவாக்கலை நகரிலிருந்த மதுபானசாலைகளும் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை பி.கேதீஸ்