தலவாக்கலை அருள்மிக ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தான 3 ம் வருட சங்காபிசேக விஞ்ஞாபனனம்

0
200

தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தானத்தின் மூன்றாம் வருட 108 சங்காபிசேக விஞ்ஞாபனம் சுகாதார பொறிமுறைகளுக்கமைய மிக சிறப்பாக நடைபெற்றன.
பிலவு வருடம் சித்திரை மாதம் 11ம் நாள் 24 ம் திகதி காலை 8.05 மணி முதல் 12.30 மணிவரை வரும் துவாதசி சுக்லபக்ஷ வளர்பிறை திதியும்.உத்தர நட்சத்திரமும் சித்தமிர்த யோகமும் ரிசப லக்னம் கூடிய சுபநாளில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசன் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் 108  நாம சங்காபிசேகம் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து அதனை தொடர்ந்து விசேட அலங்கார பூஜை,வசந்த  மண்டப  பூஜை,யாக பூஜை ஆகியன இடம் பெற்று  ஸ்ரீ விநாயகர் பெருமான்;,வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசன் பெருமான், ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆகிய மூர்த்திகள்,தேவஸ்த்தான உள்வீதி வலம்வருதல் இடம்பெற்றன.
இதன் போது உலகம் மற்;றும் நாட்டு மக்கள் பீடிக்கப்பட்டுள்ள கொரோனாதொற்றிலிருந்து விடுபட விசேட பார்த்தனையும் இடம்பெற்றன.
சமய கிரியைகள் புத்தசாசன மத விவகார அமைச்சின் இந்து சமய விவகார இணைப்பாளரும்,சர்வமத இந்து பீட செயலாளருமான சிவாகம ஞானவாரி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேவஸ்த்தான குருக்கள் லங்கா தேசமானி முத்துசாமி ஐயர் பிரசாந்த சர்மா,ஆலய தேசிகர் ம.விஜயகாந்த் தேசிகர் ஆகியவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றன.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான பக்த அடியார்களே கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here