அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்கிளையார் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு தலவாக்கலை சென்கிளையார் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முச்சக்கரவண்டியின் சாரதி அதிவேகமாக வண்டியை செலுத்தியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது.