தலவாக்கலை சென்.கிளயார் பகுதியில் போராட்டம்

0
196

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை, சென்கிளயர் தோட்டத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர்.

மக்களை வதைக்கும் ‘கோட்டா – ரணில்’ அரசு எவ்வித நிபந்தனையுமின்றி பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர்.

அத்துடன், கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெறும் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவையும், மலையக மக்கள் சார்பில் வெளிப்படுத்தினர்.

அதேபோல பெருந்தோட்டதொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், காணி உரிமை வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோஷங்களும் எழுப்பட்டன.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here