தலவாக்கலை டி.ஆர்.ஐ சென்கூம்ஸ் தோட்டத்தின் மேல் பிரிவு மற்றும் சென்கூம்ஸ் கீழ்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

0
214

தலவாக்கலை டி.ஆர்.ஐ சென்கூம்ஸ் தோட்டத்தின் மேல் பிரிவு மற்றும் சென்கூம்ஸ் கீழ்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் 100 க்கு மேற்பட்டோர் 25.07.2018 அன்று காலை முதல் பணி புறக்கணிப்புடன் தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இத்தோட்டத்தின் மேல் பிரிவான டேம் பிரிவு தொழிலாளர்கள் மற்றும் கீழ் பிரிவு தொழிலாளர்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிர்வாகம் புறக்கணித்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தோட்டத்தின் தேயிலை காணிகளை சமீபகாலமாக முறையாக பராமரிக்க தவறி வரும் தோட்ட நிர்வாகம் நல்ல தேயிலை விளைச்சல் தரக்கூடிய தேயிலை மலைகளை துப்பரவு செய்யும் வசதிகளை செய்யாது காட்டு புற்களை வளர்த்து வருகின்றது.

IMG-20180725-WA0004 IMG-20180725-WA0005

இதனால் நாளாந்த தேயிலை தொழிலை முன்னெடுக்க முடியாமல் வேலை நாட்களை இழக்கும் நிலையும் இதன்மூலம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கும் தொழிலாளர்கள் இந்த நிலையில் அரசாங்க பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்றால் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தேயிலை சபை அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையம் இவ்விரு தோட்டப்பிரிவுகளின் தொழிலாளர்களின் நலன்களிலும் அவர்களுக்கான வளங்களிலும் அக்கறை காட்ட வேண்டும்.

ஆனால் தனியான தோட்ட அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் இயங்கும் இவ்விரு தோட்டப்பிரிவுகளின் தொழிலாளர்களின் நலத்தில் எந்தவோர் நடவடிக்கையும் சென்கூம்ஸ் தோட்டம் நிர்வாகம் எடுப்பதில்லை என்பதால் தாம் பணியைச் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவதாக ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here