தலவாக்கலை பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – சாரதிகள் அவதானம்….

0
178

கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை, அட்டன், பொகவந்தலாவ, நுவரெலியா, மஸ்கெலியா போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் 18.08.2018 அன்று மாலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளாயர் பகுதியில் இடம் பொற்ற பாரிய மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் நிறுத்துமிடமும் சேதமாகியுள்ளது.

இப்பிரதான வீதீயினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாகவே இடம்பெற்று வருகின்றது. எனினும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இதனால் நுவரெலியா செல்லும் பயணிகளும், அட்டன் செல்லும் பயணிகளும் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here