கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட தலவாக்கலை-பூண்டுலோயா பிரதான பாதையில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையால் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு தலவாக்கலை பகுதியிலிருந்து பூண்டுலோயா நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி செல்லும் வாகனங்கள் இடையிலேயே பல மணிநேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் அடிக்கடி மண்சரிவு மற்றும் கற்கள் சரிந்து வரும் அபாயம் காணப்படுவதால் அப்பகுதியில் செல்லும் போது கவனமாகவும் அதேநேரத்தில் அவ்வழியாக மழை அதிகமாக உள்ள நேரங்களின் பயணப்பதை குறைத்து கொள்ளுமாறு கொத்மலை பிரதேச சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




