27 முறையாகவும் பிரமாண்டமான முறையில் தலவாக்கலை சத்தார்மா விகாரையிலிருந்து விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பெரகராவில் முதல்முறையாக ஆறு யானைகளும் விசேட பேழையை தாங்கி வந்த லீலா எனும் பெயர் உடைய யானை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகிய வண்ணமயமான ஆடையுடன் பவனி வந்தமையும் கோலாட்டம்,மயிலாட்டம்,கண்டிய நடனம்,சுளகு நடனம் , பெரிய பாபா நடனம்,முகமூடி நடனம்,கரகம்,என ஐம்பத்துக்கும் மேற்பட்ட நடனவகைகளும் முதல் முறையாக இடம்பெற்றது.விசேட உடையணிந்து நிலமே என அங்கிகரிக்கப்பட்ட தலவாக்கலை நகர உறுப்பினர் பஷான் அவர்களும் கலந்துக்கொண்டமையும் சிறப்பாக இருந்தது.
நாவலப்பிட்டி.,கினிக்கத்தனை,ஹட்டன்,மஸ்கெலியா,நுவரெலியா,டயகம,அக்கரப்பத்தனை,மெராயா,எல்ஜீன் என பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்தமை சிறப்பம்சமாகும்.
மூவின மக்களும் ஒற்றுமையாக இந்நிகழ்வில் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும் .நகரில் பல இடங்களில் அன்னதானம் ,தன்சல் வழங்கியமையும் நகரில் பொருத்தப்பட்டிருந்து மின்விளக்குகளின் ஔி கண்களை கவரக்கூடியதாக இருந்தமையும் விசேட அம்சமாகும்.
ஷான் சதீஸ், க.கிஷாந்தன்