தலவாக்கலை, ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்திலுள்ள 9ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (23) ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த குடியிருப்பிலுள்ள ஒரு அறையில் இருந்த ஆடைகள் உட்பட சில பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
அத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் உடனடியாக செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தியால், ஏனைய குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்தால் சேதமடைந்த குடியிருப்பை புனரமைக்க தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
குறித்த குடியிருப்பில் வசித்த ஐந்து பேர் தற்போது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளுதோடு, அவர்களுக்கான உலருணவு கிராம உத்தியோத்தர் பொறுப்பேற்பில் வழங்கப்பட்டு வருகிறது.
தீ பரவியமைக்கான காரணம் குறித்து தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




