தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வாராந்த சந்தை வைபக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0
149

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய “சௌபாக்ய தெக்ம” வேலைத்திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் 100 நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப வேலைத்திட்டத்திற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் அனுப்பியுள்ள செயற்றிட்டத்தின் கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு தலவாக்கலை லிந்துலை நகர சபை 100 நகரங்கள் வேலைகளுக்கான வேலைத்திட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் நன்றியினை தலவக்கலை நகர பிதா தெரிவித்துக்கொள்கின்றார்.

இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக நாளை பி.ப 3.30 மணியளவில் நகர சபை உறுப்பினர்களோடு நகர அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை லிந்துலை நகர சபையில் ஞாயிற்றுக்கிழமை வாராந்த சந்தையில் தொழில் வாய்ப்பற்றோருக்கு வருமானங்களை ஏற்ப்படுத்தி கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் அப்பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுப்பதற்கும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

பா.பாலேந்திரன், கே.சுந்தரலிங்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here