மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக தலவாகலை வனிகசேகர புரத்தில் பாரிய மண்சரிவு ஒன்று 14.08.2018.காலை வேலையில் ஏற்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேலை தலவாக்கலை வனிகசேகர புரத்தின் மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதியும் தாழ் இறங்கும் அபாயம் காணபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது
எனவே இன்று காலை ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தின் காரணமான பாரிய மண்மேடு ஒன்று சரிந்து கொத்மலை நீர் தேக்கத்தில் விழுந்துள்ளதாகவும் இந்த மண்சரிவு அபாயத்தின் காரணமாக தலவாகலை வனிகசேகர புரத்தில் வசிக்கும் 80குடும்பங்களையும் அவதானமாக இருக்குமாறு தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்கசேபால கோறியுள்ளார்
இதேவேலை குறித்த பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட கூடிய சந்தர்பங்கள் காணப்படுமாயின் தலவாகலை வனிகசேகபுரத்தில் வசிக்கின்ற 80குடும்பங்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பவேண்டியது நேரிடும் எனவும் தெரிவிக்கபடுகிறது
தலவாகலை மேல்கொத்மலை திட்டம் அமைக்கபட்ட காலபகுதியில் இருந்து குறித்த பிரதேசம் அபாயகரமான பிரதேசமாக காணபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த அனர்ந்தம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அனர்த்த மத்திய நிலையத்திற்கும் அறிவிக்கபட்டுள்ளதாக தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால மேலும் தெரிவித்தார்.
எஸ்.சதீஸ், தலவாகலை சுரேன்