தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தான வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
பிரதமகுரு சிவஸ்ரீ. ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான பதினான்கு நாட்களும் தினசரி காலை பூஜைகள் ஆரம்பமாகி நண்பகல் சிறப்புபூஜை, மாலை வசந்தமண்டப பூஜைகள், மும்மூர்த்திகளின் உள்வீதியுலா என்பன இடம்பெற்று வந்தது.
அத்தோடு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 19ஆம் திகதி சனிக்கிழமை திருச்சூரகவேட்டைத் திருவிழாவும், 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சப்பரத் திருவிழாவும் இடம்பெற்றது.
21ம் திகதி திங்கட்கிழமை மும்மூர்த்திகள் வெளிவீதியுலா இடம்பெற்றது. சுவாமிகள் தேவஸ்தானத்திலிருந்து வெளிவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்புரிந்து மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடைந்தது. இதில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
23ம் திகதி புதன்கிழமை தலவாக்கலை மல்லிகைப்பூ விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய இசை முழங்க பறவைக்காவடி, பாற்குடம், எடுத்துவரப்பட்டு பாலாபிஷேகமும் இடம்பெறும். அதனை தொடர்ந்து மாலை கொடியிறக்கம் இடம்பெறுகிறது.
24ஆம் திகதி வியாழக்கிழமை பூங்காவனத்திருவிழா, திருவூஞ்சல் உற்சவம் இடம்பெற்று வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி வைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறவுள்ளது.
சுமார் 12 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)