ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவானது நவீனமயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தலைமையகத்தின் கட்டடமானது 70 வருடங்கள் பழமையானது என்றும், இதன் காரணமாகவே இதனை புதுப்பித்து நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் யோசனையில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.