தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவை 30,000 ரூபாவாக அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார். அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இன்று (19) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.“அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, சுகாதார அமைச்சர் இன்று நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்படி தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவை 30,000 ரூபாவாக அதிகரிப்பதாக உறுதியளித்தார்.இதில் 25,000 ரூபா இந்த வருடம் மார்ச் மாதம் வழங்கப்படும். மீதி 5,000 ரூபாயை அடுத்த வருடம் ஜனவரி மாதமும் அடுத்த வருடத்தின் கடைசி காலாண்டில் எரிபொருள் கொடுப்பனவை வழங்குவதற்கு உடன்பட்டனர்.
மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பாக குழுவொன்றை நியமித்து அதற்கான விரைவான தீர்வை விரைவில் வழங்குவதாக உறுதியளித்தனர் என தெரிவித்தார்.