தான தர்மம் என்ற தொனிப்பொருளில் சிறுவர்களுக்கு முறையான தேவார மற்றும் பஜனை பயிற்சி

0
133

நுவரெலியா மாவட்ட சிறுவர்களுக்கு முறையான தேவார பயிற்சி மற்றும் பஜனை சங்கீத கச்சேரிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு மலையக ஐயப்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா காயத்ரி அம்மன் லங்கா ஈஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
இதன்போது சிறுவர்களுக்கு இசையால் இறைவனை அடையாளம் என்ற கூற்றுக்கிணங்க சிறுவர்களுக்கு இசையுடான தேவார மற்றும் பஜனை பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் காயத்திரி பீடத்திற்கும்.நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும். இரண்டு பசுக் கன்றுகள் தானமாக வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட அலங்கார பூஜையும்,18 படி உடனான சக்தி பூஜையும் மிக சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்வில் சபரி மலைக்கு செல்வதற்கு மாலை அணிந்த குரு சுவாமிமார்களும் ஐயப்ப சுவாமிமார்கள் உட்பட ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here