தாமரைக்கோபுரம் நமது நாட்டிற்கு வீண்விரயமானது

0
189

கொழும்பு தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட கடனை ஈடுசெய்வதற்காக, அடுத்த 5 வருடங்களுக்கு அதன் நாளாந்த வருமானம் 41,000 அமெரிக்க டொலர்கள் பெறப்படவேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த கோபுரத்திற்காக மொத்தம் 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் கடனை அடைப்பதற்கு மேலும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது கடினமான நிலை எனத் தெரிவித்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாரிய வருமானம் ஈட்டும் நாட்டில் இவ்வாறான கோபுரம் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.

நம்மைப் போன்ற நாட்டிற்கு இது வீண்விரயமான ஒன்று, இதில் நடந்த ஊழல் பற்றி தனித்தனியாக பேச வேண்டும், என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here