தாமரை கோபுரத்தை பார்க்க படையெடுத்த மக்கள்

0
149

கடந்த நீண்ட வார இறுதியில் மொத்தம் 18,728 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இது கணக்கிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த காலப்பகுதிக்குள் தாமரை கோபுரத்தை பார்வையிட 367 வெளிநாட்டு பார்வையாளர்கள் வந்ததாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15, 2022 அன்று கோபுரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது முதல் இன்று வரை மொத்தம் 953,918 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர் மற்றும் அவர்களில் 18,320 வெளிநாட்டினர் அடங்குவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here