தாயின் காதலரால் 13 வயது மகள் கர்ப்பம்: நீதிமன்றம் அளித்த உத்தரவு

0
98

தாயின் சம்மதத்துடன் பதின்மூன்று வயது சிறுமியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மல்சிறிபுர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபரை இன்று (3) வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பதில் நீதவான் நேற்று முன்தினம் (01) உத்தரவிட்டுள்ளார்.

வரக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் பிரசன்ன ரத்நாயக்க என்ற 32 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்சிறிபுர பஹமுன பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி கனரக வாகன சாரதியான தந்தைக்கு உதவியாக இருந்தவராலேயே வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறிலங்காவை மோசமான நாடாக சித்தரிக்காதீர்கள்: ரணில் சீற்றம் (காணொளி)
சிறிலங்காவை மோசமான நாடாக சித்தரிக்காதீர்கள்: ரணில் சீற்றம் (காணொளி)
தந்தையுடனான நட்பின் காரணமாக எப்பொழுதும் இவர்களது வீட்டிற்கு வரும் சந்தேகநபர் சுமார் மூன்று வருடங்களாக சிறுமியின் தாயாருடன் இரகசியமாக தொடர்பு கொண்டுள்ளதாகவும், சிறுமியின் தந்தை களனி பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே தாயாரின் சம்மதத்துடன் அந்த வீட்டில் வைத்து சந்தேக நபர் சிறுமியை பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்துள்ளார் இதனால் அவர் கர்ப்பமானார். இது தொடர்பில் சிறுமி தனது தந்தைக்கு அறிவித்ததையடுத்து, தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட மல்சிறிபுர காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​அவரை பிணையில் விடுவிப்பதற்காக சிறுமியின் தாயாரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை விசேட அம்சமாகும்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, நன்னடத்தை பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது சில குறைபாடுகள் காரணமாக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாய்க்கு தெரிந்தே பல சந்தர்ப்பங்களில் தாயின் காதலனால் வீட்டில் வைத்து வன்புணர்வு செய்ததாகவும் இதனால் தனது ஒன்பதாம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்த நேரிட்டதாகவும் சிறுமி காவல்துறையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது இளைய சகோதரன் மற்றும் சகோதரிக்கு இவ்வாறு வன்புணர்வு செய்த சம்பவங்கள் குறித்தும் தெரியும் எனவும், தாயின் அச்சுறுத்தல் காரணமாக இந்த சம்பவங்களை யாரிடமும் கூறமுடியவில்லை எனவும், ஆனால் அதனை நிறுத்துமாறு தனது தாயிடம் கேட்டுள்ளதாகவும் சிறுமி கூறியுள்ளார். ஆனால் தனது கோரிக்கைகளை கேட்க தாய் மறுத்ததுடன் பல சந்தர்ப்பங்களில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here