தாய்குலத்தைப் பற்றி தவறாக பேசிய இராஜாங்க அமைச்சருக்கு மக்கள் நீதிமன்றில் தக்க தண்டனை வழங்கப்படும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மலையக அரசியல்வாதியின் அந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார்.