தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் மீதான தீர்ப்பு இன்று

0
3

அரச குடும்பத்தை அவமரியாதைக்கு உட்படுத்திய வழக்கில், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra) மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கில், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா குற்றவாளியாக நிரூபிக்கப்படுவாரானால், அவருக்கு சுமார் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் கடுமையான ”lese-majeste” எனப்படும் அரச அவதூறு சட்டத்தின் கீழ், 76 வயதான தொழிலதிபரும் முன்னாள் பிரதமருமான தக்சின் 2015, ஆம் ஆண்டு தென் கொரிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here