தாய்லாந்தில் பேருந்து சாலையை விட்டு விலகியதில் 14 பேர் உயிரிழப்பு

0
241

தாய்லாந்தின் தெற்கு கடலோர மாகாணமான Prachuap Khiri Khan என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக உடைந்துள்ளதாகவும் மேலும் முப்பத்திரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் தெற்கு கடலோர மாகாணமான Prachuap Khiri Khan என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்தில் உலகிலேயே அதிக சாலை விபத்துகள் இடம்பெறுவதுடன் , சாலை விபத்துக்களால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

நாட்டின் பரபரப்பான சாலைகளில் மோசமான பாதுகாப்பு தரங்கள் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தின் சாலை விபத்து தரவு மையத்தின்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் 15,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டில், போக்குவரத்து தொடர்பான உயிரிழப்புகள் நாட்டில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here