இறந்த நிலையில் மீட்கப்பட்ட தாய் சிறுத்தையை தேடி அழைந்த குட்டி சிறுத்தையை பிடித்த தோட்ட முகாமையாளர் நல்லத்தண்ணி வனஜீவி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஹன்சி தோட்ட தேயிலை மலையில் அநாதரவாக திரிந்த சிறுத்தை குட்டியே 04.04.2018 பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 02.04.2018. ஹன்சி தோட்டத்தில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியிலிருந்து இறந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டது.
கம்பி வளையில் சிக்குண்டு பலியான பெண் சிறுத்தையின் உடல் சிதைவுண்ட நிலையில் உடவல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையிலே அதே இடத்தில் ஒரு மாதமேயான சிறுத்தை குட்டி தோட்ட முகாமையாளரால் கண்டு நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்