அநீதி அராஜகத்துக்கு அடிபணியாமல் தம்மையே அர்ப்பணித்த தேவகுமாரனின் பிறப்பு உலக மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு
-அமைச்சர் பி. திகாம்பரம் விடுத்துள்ள நத்தார்தின வாழ்த்துச் செய்தி
இந்த உலகத்தில் அநீதிக்கும்ரூபவ் அராஜகத்துக்கும் அடிபணியாமல் மக்களுக்காக தமது உயிரையே அர்ப்பணித்த தேவகுமாரன் யேசு பிரானின் பிறப்பு உலகமக்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். அதைக் கொண்டாடும் சகல மக்களுக்கும் இனிதான நத்தார் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில்
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்….
மனித குலத்தில் பேராசையும்ரூபவ் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு யாரையும் அழிக்க நினைக்கும்
கொடூர குணமும் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது என்பதற்கு யேசு பிரானின் பிறப்பும் இறப்பும் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது. அவற்றுக்கு அடிபணியாமல் உலக மக்களை இரட்சிப்பதற்காக தமது இன்னுயிரையே அர்ப்பணித்த தேவகுமாரனின் வரலாறு எமக்கெல்லாம் ஒரு பாடமாகத் திகழ்கின்றது. அவருடன் கூட இருந்த சீடர்களே அவரைக் காட்டிக் கொடுத்த துரோகத் தனத்தையும் யேசுபிரானின் வரலாற்றில் காண்கிறோம்.
அதிகார வெறி கொண்ட யூதர்கள் அவரை அழிப்பதற்காக பாரமான சிலுவையை சுமக்கச் செய்துரூபவ் அவரது
தலையில் முள்முடி தரித்துரூபவ் இரத்தம் கசிய சவுக்கால் அடித்து கொடுமைகள் செய்த போதும்
அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக் கொண்டு மக்களின் சுபிட்சமான வாழ்க்கைக்காக
சிலுவையில் அறையப்பட்டதையும் ஏற்றுக் கொண்டார்.
இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நிரூபித்த அவர் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை.
“இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள்ரூபவ் பிதாவே இவர்களை மன்னியும்” என்று இறைவனை இறைஞ்சினார். சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். தர்மம் வெல்லும் என்பது எடுத்துக்காட்டப்பட்டது. அவரது பிறப்பின் அர்த்தம் மக்களால் உணரப்பட்டது. இத்தகைய உன்னத குணத்தை அவரது சரிதத்தின் ஊடாக தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அத்தகைய தேவபாலன் அவதரித்த நத்தார் தினத்தில் நாட்டில் அராஜகம் நீங்கவும் அன்பு செழிக்கவும் துரோகம் ஒழியவும்ரூபவ் மக்கள் நிம்மதியாக வாழவும் பேராசைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தர்மம் தழைக்கவும் நீதி நிலைக்கவும் காலம் கனிய வேண்டும் என்று நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.