மலையகம் மீது அமரர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கனவு தற்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானூடாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாகவே முழுமையான வசதிகள் கொண்ட வீட்டுத்திட்டம் கையளிக்கப்படுகின்றது.இதை பல வசை பாடினாலும் அவர்களின் இயலாமையை எடுத்துகாட்டுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுனந்தன் தெரிவித்துள்ளார். அக்கரப்பத்தனை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டங்கள் கடந்த ஆட்சியின் போது நிர்மானிக்கப்பட்டன.ஆனால் ஒரு வீடு கூட முழுமைப்படுத்தப்படவில்லை. மக்களும் குடியேற முடியாத நிலையில் காணப்பட்டனர்.ஆனால் இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய வகையில் முழுமையான வீட்டுத்திட்டங்கள் மக்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் கையளிக்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மக்களுக்கு அனைத்து வசதிகளுடைய வீடுகளையே கையளிக்க காத்திருந்தார்.ஆனால் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக காணப்பட்ட திகாம்பரத்தின் திராணியற்ற செயற்பாட்டால் வீடுகள் முழுமைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.வீடுண்டு கூரையில்லை!கூரையுண்டு போக பாதையில்லை!பாதையுண்டு குடிக்க நீரில்லை என எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற வீடுகளையே நிர்மாணிக்க முடிந்தது.அதுமட்டுமல்லதாது உறுதியற்ற மணல்,சீமெந்துகளை பயன்படுத்தி வீடுகளை தன் லாபத்துக்காக கட்டியதால் பல வீடுகள் சரிந்து விழுந்து அநாதையாக கிடப்பபில் போடப்பட்டது.
அவ்வாறு ஓரங்கட்டப்பட்ட மட்டும் கைவிடப்பட்ட அனைத்து வீடுகளையும் அனைத்து வசதிகளும் கூடியவாறு அமைத்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மக்களுக்கு கையளித்து வருகின்றார்.
முழுமைப்படுத்தப்படாமல் வீடுகளை கட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல் ஜீவன் தொண்டமானால் மூழுமைப்படுத்தப்படு கையளிக்கப்படுகின்ற வீடுகள் தொடர்பில் திகாம்பரம் தன் சகாக்களை வைத்து விமர்சனம் செய்து வருகின்றார்.திகாம்பரமும் அவரின் சகபாடிகளும் வெறுமனே வாயால் வடை சுடுபவர்கள் என்பதை மக்கள் நன்கு உணர்வார்கள்.இ.தொ.கா என்றுமே மக்களோடு மக்களாக காணப்படும்.அமரர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கனவு நிறைவேறும் என உபச்செயலாளர் சச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.