திசைக்காட்டி அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி அம்பலம் – ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் மாநாடு நடத்த தீர்மானம்! 

0
7

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலக்கரி  கொள்வனவில்  மோசடி இடம்பெற்றிருப்பதை வௌிப்படுத்துவதற்கான மாநாடு ஒன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) காலை 9.30 மணியளவில்  கொஸ்கம Grand Divine  ஹோட்டலில் இந்த மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

“உண்மையை அறிந்துகொள்ள நீங்களும் வாருங்கள்” என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய  தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here