திம்புள்ள பகுதியிலும் தோட்ட தொழிலாளர்கள் வீதியில் அமர்ந்து போராட்டம்

0
125

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், பத்தனை திம்புள்ள பகுதியில் இன்று (28.04.2022) மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்தும்,   கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். வீதியை வழிமறித்ததன் காரணமாக நாவலப்பிட்டி, கெட்டபுலா, குயின்ஸ்பெரி, இராவணகொடை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

கெட்டபுலா கொலபத்தனை, தலபத்தனை, கொங்காளை, குயின்ஸ்பெரி, கெலிவத்தை, போகவத்தை, திம்புள்ள போன்ற பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது போராட்டகாரர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கறுப்பு பட்டிகளையும் தலையில் அணிந்திருந்தனர். அத்தோடு, வீதியில் அமர்ந்தவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here