குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் திரிபோஷ வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நேற்று (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திரிபோஷா ஏற்கனவே தனது தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களை வாங்கும் போது பதிவு செய்யப்பட்ட சப்ளையர்களுக்கு 15% VAT செலுத்துகிறது.