திருமணத்திற்கு தயாரான இளம் தம்பதி நீரில் அடித்து சென்று மாயம்!

0
204

வெயாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இளம் காதலர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த இளம் காதலர்கள் நீராடச் சென்ற போதே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.விரைவில் திருமண பந்தத்தில் இணைய எதிர்பார்த்திருந்த 19 வயதுடைய இளம் காதலர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போன இளைஞன் வெயங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும், யுவதி குடாஓயா லபுதென்ன பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன காதலர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here