திருமண நிகழ்வின்போது கிணற்றில் விழுந்து 13 பேர் பலி

0
172

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழாவின் போது, ​சடங்கு நிகழ்ச்சிக்காக ​கூடியிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்தனர்.
அதிக பாரம் தாங்காமல் பலகை உடைந்ததில் பெண்கள், சிறுமிகள் உள்பட 13 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்தவர்களை மீட்டனர். இதில் 13 பேரும் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தை குஷிநகர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 இலட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here