திருவிழா தேர் பவனியின் போது ஏற்பட்ட சோகம் – மின்சாரம் தாக்கி இருவர் பலி

0
216

பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிழா தேர் பவனியின் போது, மின் இணைப்பு கம்பியில் ரதம் மோதி ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தையில் இருந்து மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம், நேற்றுகாலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ் அனர்த்தத்தில் 27 மற்றும் 37 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதனர்.

மேலும், மரணித்த இருவரும் பூட்டாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 30, 57, 43 வயதுடைய மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here