திரைப்படமாகும் இந்திய கார் பந்தய வீரரின் நிஜகதை

0
59

‘எப் 1’ கார் பந்தயத்தில் புள்ளிகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது.

நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்று படத்தினை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். இதற்கான கதையினை ‘சூரரைப் போற்று’ படத்தின் கதையில் பங்கெடுத்த ஷாலினி உஷா தேவி எழுதியிருக்கிறார்.

இப்படத்தினை ப்ளூ மார்பில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் நரேன் கார்த்திகேயனாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இப்படத்தில் கோயம்புத்தூரில் பிறந்த ஒரு பையன் எப்படி ‘எப்’ பந்தயம் வரை பயணித்தான் என்று சொல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.

நரேன் கார்த்திகேயன் அவரது தந்தையிடம் எடுத்த பயிற்சி, 15 வயதில் போட்டிகளில் பங்கெடுத்தது, பிரான்ஸ் நாட்டில் பயிற்சி எடுத்தது. அங்கு அவருக்கு ஏற்பட்ட இனவெறி பாதிப்பு. அவரது வெளிநாட்டு போட்டிகளில் பெற்ற வெற்றி உள்ளிட்ட அனைத்துமே இடம்பெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here