தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி…..

0
185

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவைக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மலையகத்தின் தோட்டப்பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக அதன் தலைவர் இராஜமணி பிரசாத் தலைமையில் 08.08.2018 அன்று கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வெள்ளைக்கொடி பறக்கவிட்டு விளக்கேற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதன்போது தோட்ட பொது மக்கள், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here