“தீபத் திருநாளாம்” தீபாவளி திருநாளை உவகையுடனும் உற்சாகத்துடனும் அனைத்து மக்களும் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” – என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”தீபத்திருநாள் நமக்கு அதிகமான அறிவாற்றலை வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிப்பதோடு, அறியாமை எனும் இருள் அகற்றி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.
இது சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுக்கான மிகுந்த நம்பிக்கையை கொண்டு வருவதோடு மக்களை பிரித்துவைக்கும் எல்லா வேறுபாடுகளையும் களைந்து அவர்கள் மத்தியில் சுபீட்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். இந்த தீபாவளியை கொண்டாடுகிற இந்த தருணத்தில் அதர்மம் ஒழிந்து, ஆதிக்க உணர்வு மறைந்து, ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திடும் ஒரு பண்டிகையாக இப் பண்டிகை அமைய வேண்டும் என்று இன்நன்னாளில் வாழ்த்துகிறேன்” — என்றும் கூறியுள்ளார்