தீபாவளி பண்டிகைக்கு முன்பு தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்கவேண்டும்- பழனிவேல் கல்யாணகுமார் தெரிவிப்பு!!

0
169

தீபாவளி பண்டிகைக்கு முன்பு தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்கவேண்டும். என்கிறார் நோர்வூட்பிரதேசசபை உறுப்பினர் பழனிவேல் கல்யாணகுமார்இம்முறை வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்பு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயாமான சம்பளத்தை பெற்று கொடுக்கும் நோக்கில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் விரைந்து செயல்பட்டு தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிபொதுச்செயலாளரும் நோர்வூட்பிரதேசசபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யானகுமார் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

பெறுந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பளவிடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் சைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் செய்துகொள்ளபட்ட ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில் முதலாவது கட்ட பேச்சிவார்ததையும் இனப்பாகுபாடு இன்றி நிறைவடைந்துள்ளது. நவம்பர் மாதம் 06ம் திகதி தீபாவளி பண்டிகையை எமது மக்கள் கொண்டாட இருக்கின்ற நிலையில் எமது தொழிலாளர்களுக்கு சம்பள விடயம் தொடர்பில் கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்றதொழிற்சங்கங்கள் உரிய தீர்வினை மக்களுக்கு பெற்று கொடுக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்

கடந்த கூட்டு ஒப்பந்தத்தின் போது மக்களை தூண்டிவிட்டு ஆர்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு கூறினார்கள் ஆனால் கடந்த முறை முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக மேற்கொள்ளபட்ட ஆர்பாட்டமானது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் தோல்வியை தந்தது ஆனால் இறுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு வெரும் 50ரூபா மாத்திரமே சம்பளம் அதிகரிக்கபட்டது ஆனால் இம்முறை எமது மக்கள் எமாறா போவதும் இல்லை எமது மக்களை ஏமாற்றவும் முடியாது

தேர்தல் காலபகுதியில் எமது தோட்ட தொழிலாளர்களை மாற்று கட்சியினர் சாக்கு போக்குகளை கூறி திசைதிருப்ப முயற்சிசெய்வார்கள் ஆகவே எமது மக்கள் மிக அவதானத்துடன் நிதானத்துடனும் சிந்தித்து செயல்பட வேண்டும் இன்று சில தோட்டநிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவிற்காக காலை முதல் மதியம் வரை தேயிலை கொழுந்து பறிக்குமாறும் மதியம் இரண்டு மணியில் இருந்து மாலை நான்கு மணிவரை கலைபிடுங்குமாறு தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை கோறிவருகிறது. இவ்வாறு தோட்ட தொழிலாளர்களை தோட்டநிர்வாகங்கள் பழிவாங்கி தற்பொழுது தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு கொடுப்பணவோடு வழங்கபடுகின்ற 730ரூபாவை இல்லாமல் ஆக்குவதற்கே ஒரு சில தோட்டநிர்வாகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here