குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெபராஹார, பழைய வீதி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குடாஓயா பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.
துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி, அவரின் 5 வயது சகோதரருடன் பயிர்ச்செய்கை நிலத்திலுள்ள கூடாரமொன்றில் நித்திரைகொண்டிருந்த போது, அருகிலிருந்த கூடாரத்திலிருந்த 27 வயதுடைய நபரொருவர் துப்பாக்கியை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரின் கூடாரத்துக்கு அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தியுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த நான்காம் திகதி நஞ்சருந்தியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பொலிஸாரின் விசாரணைகளின்போது இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு சிறுமி அறிவித்துள்ளாா்.
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய சந்தேநபர் அந்த பிரதேசத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். குடாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.சீ. பிரசாத் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.