‘துரந்தர் 2’ சிறப்பு திரையிடல் திடீர் ரத்து

0
49

ரன்​வீர் சிங், சாரா அர்​ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்​றி​பெற்ற ‘துரந்தர்’ படத்​தின் அடுத்த பாகம், ‘துரந்தர்; த ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகி​யுள்​ளது. ஆதித்யா தார் இயக்​கி​யுள்ள இப்​படம் இன்று வெளி​யாகிறது.

இந்​தி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு, மலையாளம், கன்னட மொழிகளி​லும் மொழி மாற்​றம் செய்​யப்​பட்டு ரிலீஸ் ஆகிறது. இப்​படத்​துக்​காக தமிழ், தெலுங்​கில் கட்டண பிரீமியர் காட்​சிகள் நேற்று மாலை திரை​யிடப்பட இருந்​தன. திரை​யிடலுக்கு சில மணி நேரங்களுக்கு முன் அக்​காட்​சிகள் ரத்​து செய்​யப்​பட்​டன. மொழி மாற்ற பதிப்​பின் தாமதத்​தால் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, இப்​படத்​துக்கு தணிக்கை வாரி​யம் பரிந்​துரைத்த வெட்​டுக்​களின் பட்​டியல் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி​உள்​ளது. அதில், இப்​படத்​தில் 21 மாற்​றங்​களைச் செய்​யு​மாறு தணிக்​கைக் குழு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தலை​யைச் சுத்​தி​ய​லால் உடைப்​பது உள்​ளிட்ட பயங்​கர​மான வன்​முறைக் காட்சிகளை​யும் சில ஆபாச​மான வார்த்​தைகளை​யும் நீக்​கு​மாறும் கோரி​யுள்​ளது. அந்த மாற்​றங்​களுக்​குப் பிறகு ஏ சான்​றிதழுடன் இப்​படம் இன்று வெளி​யாகிறது. மொத்​தம் 3 மணி நேரம் 51 நிமிட நேரத்​தைக் கொண்​டிருந்த இப்​படம், 21 மாற்​றங்​களுக்​குப் பிறகு 3 மணி நேரம் 49 நிமிடங்​களாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here