துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்தது 3,554 ஐ எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பலியானவர்களில் 2,316 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவில் சுமார் 700 பேரும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவில் 538 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.