துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் பேரழிவின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை தேடி வருகின்றனர்.
அங்கு நிலவுட் உறைபனி நிலைமைகள் ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன, அவர்கள் இப்போது தங்குமிடம், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.
துருக்கியின் ஜனாதிபதி இந்த நிலநடுக்கத்தை “நூற்றாண்டின் பேரழிவு” என்று அழைத்தார்.