பொகவந்தலாவ பெற்றசோ டெவன்போல் தோட்டபகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 11.08.2018 சனிக்கிழமை விடியற்காலை 2.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது
இவ்வாறு சடலமாக மீட்கபட்ட பெண் 30வயதுடைய சிவலிங்கம் நிர்மலா எனவும் இரண்டு பிள்ளைகளின் தாய்யெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பெண் தனது பிள்ளைகள் இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் நன்றாக படிக்கவேண்டும் மெனவும் நான் நாளை இருக்க மாட்டேன் நீர் தேக்கம் ஒன்றில் பாய்ந்துவிடுவேன் என தனது பிள்ளைகளிடம் நேற்று இரவு கூறியதாக சடலமாக மீட்கபட்ட பெண்ணின் முதலாவது பிள்ளை பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது
சில மணி நேரம் நித்திரையில் இருந்த தாயை கானவில்லையென முதல் மகள் எழுந்து தேடி பார்க்கும் பொழுது அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு கூச்சலிட்டதை அறிந்த அயல்விட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தாக தெரிவிக்கபடுகிறது.
இதேவேலை குறித்த பெண்ணின் கணவர் பலாங்கொடை பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும் குறித்த பெண்ணுக்கு கடன் சுமை இருந்திருக்கலாமெனவும் 10.08.2018. வெள்ளிகிழமை தோட்டத்தில் கொழுந்து பறித்த சம்பளம் 1000ரூபா இருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் திடீர் மரணவிசாரனையாளர் திருமதி லக்ஷ்மி தலைமையில் மரணவிசாரனைகள் இடம் பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு பிரதே பரிசோதனை நிறைவடைந்த பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கபட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)