பொகவந்தலாவ செல்வகந்ததோட்டபகுதியில் உள்ள வீடுஒன்றில் இருந்து குடும்பஸ்த்தர்ஒருவரின் சடலம்மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 14.09.2018 வெள்ளி கிழமை காலை 07மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபர் பொகவந்தலாவ செல்வகந்த தோட்டபகுதியில்வாடகைக்கு வீடு ஒன்றைபெற்று தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்ததாகவும் விடியற்காலைஅவருடைய மனைவி எழும்பிபார்கும் பொழுது தூக்கில்தொங்கிய நிலையில்கானபட்டதாக பொலிஸாரின்ஆரம்பகட்ட விசாரனைகளில்இருந்து தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறு தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாகமீட்கபட்டவர் 39வயதுடைய இரண்டு பிள்ளைகளின்தந்தையான ஸ்ரீதரன் ராஜீவ்என்பவரே சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில்பொலிஸார் சந்தேகம்வெளியிட்டுள்ளதாகவும் சம்பவஇடத்திற்கு அட்டன் நீதிமன்ற நீதவான் வரழைக்கபட்டு விசாரனைகலை மேற்கொள்ள இருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும்குறிப்பிட்டனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொகவந்தலாவ பொலிஸார்மேற்கொண்டு வருகின்றமைகுறிப்பிடதக்கது.
எஸ். சதீஸ்