‘தூம் 4’ இயக்குநர் பொறுப்பில் இருந்து அயன் முகர்ஜி விலகியிருக்கிறார்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வார் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து ‘தூம் 4’ படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அப்பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக வேறொருவரை இயக்குநராக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
‘பிரம்மாஸ்திரா 2’ படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் அயன் முகர்ஜி. அடுத்த ஆண்டு இதற்கான பணிகளைத் தொடங்கவிருப்பதால் தான் ‘தூம் 4’ இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. ‘பிரம்மாஸ்திரா’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், அதன் அடுத்தடுத்த பாகங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், அதன் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் அயன் முகர்ஜி.
மேலும், ‘வார் 2’ மற்றும் ‘தூம் 4’ ஆகிய படங்களின் கதை தன்னுடையது இல்லை என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். வெறும் இயக்குநராக மட்டுமே பணிபுரிய விரும்பவில்லை என்றும் ‘தூம் 4’ தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார் அயன் முகர்ஜி. அவரது முடிவினை தயாரிப்பாளர் மற்றும் ரன்பீர் கபூர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் ‘தூம் 4’ படத்தின் இயக்குநர் யார் என்பது விரைவில் தெரியவரும்.
HinduTmail