கொத்மலை கல்வி பணிமனைக்கு உட்பட்ட புரொட்டப் அயரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமையவாக இ.தொ.காவின் இளைஞரணி பிரிவால் குறித்த தென்னங்கன்றுகள் (21/12/2021)வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொத்மலை மற்றும் புஸ்ஸல்லாவ இளைஞர் அணி அமைப்பாளர் அர்ஜின் மற்றும் பாடசாலை அதிபர் ஆர்.ராமசீலன் ,பாடசாலை பழைய மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
நீலமேகம் பிரசாந்த்