தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத பரஸ்பர வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ட்ரம்ப் தேர்ந்தெடுத்த திட்டங்களில் தென் கொரியா 350 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா 100 பில்லியன் டொலர் மதிப்புள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் பிற எரிசக்தி பொருட்களை வாங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா கார்கள், லொறிகள் மற்றும் விவசாய பொருட்கள் உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை அதன் சந்தையில் ஏற்றுக்கொள்வதாகவும், அவற்றின் மீது இறக்குமதி வரிகளை விதிக்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.