தெரிவான 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று ‘அஸ்வசும’ கொடுப்பனவு

0
224

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 8 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை இன்று(28) வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.அதேநேரம் தகவல்களை விரைவாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும்.மேலும், நன்மைகளைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட ஆனால் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பது உள்ளிட்ட கொடுப்பனவு தொடர்பான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத பயனாளி குடும்பங்களைச் சந்திக்க வேண்டிய தேவை இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதுவரை கிடைத்துள்ள சுமார் பத்து இலட்சம் முறையீடுகள் மற்றும் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை ஆரம்பமாகியுள்ளதாக கூறும் அமைச்சர், பணிகள் முடிந்தவுடன் அதற்கான கொடுப்பனவுகள் உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தவறான தகவல்களை அளித்து எந்த குடும்ப அங்கத்தினர் நன்மைகளை பெற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பெறப்பட்ட பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here