தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையிலிருந்து பயணித்த லொறியொன்று தடுப்பு வேலிகளில் மோதி விபத்துக்குள்ளானதோடு, லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இவ் விபத்து நடந்துள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.