சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் தெற்கு சீனாவை தாலிம் எனும் புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சுமார் 230,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் விமானங்கள் மற்றும் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று (18) காலைக்குள் சூறாவளி வேகம் குறைந்து வியட்நாமை நோக்கி நகரும் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வியட்நாமின் பல மாகாணங்களில் இருந்து சுமார் 30,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.