நேற்று மாலை 5.00மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, தெஹியோவிட்ட பிடதெனியவில் சிறிய லொறி மற்றும் மோட்டார் கார் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
அவிசாவளையில் இருந்து தெஹியோவிட்ட நோக்கி சென்ற பஸ் பயணிகளை இறக்குவதற்காக தெஹியோவிட்ட பிடதெனியவில் தரித்து நின்றபோது பின்னால் பயணித்த மோட்டார் காரும் பஸ்ஸை முந்திச்செல்ல இடமின்றி பஸ்ஸின் பின்னால் தரித்து நின்றுள்ளது, அவ்வேளை காருக்கு பின்னால் சிரட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக பயணித்த சிறிய லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. பின் கார் தரித்து நின்றிருந்து பஸ்ஸின் பின்னால் மோதி விபத்தாகியது. இவ்விபத்தில் கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. கார் சாரதி சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
(அவிசாவளை நிருபர்)