தேங்காய் விலையில் உயர்வு

0
154

உள்ளுர் சந்தையில் தேங்காயின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் நடைபெற்ற இரண்டாவது தேங்காய் ஏலத்தில், ஆயிரம் தேங்காய்களின் விலை எழுபத்தாறாயிரத்து நானூற்று முப்பத்தெட்டு (76,438) ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்புடைய ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதன் விலை அறுபத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஐந்து (69,975).

722 163 தேங்காய்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன, அதில் 547 365 தேங்காய்கள் விற்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் மொத்த தேங்காய் ஏற்றுமதி நான்கு வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here