தேசிய தொற்று நோயியல் பிரிவானது பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000ஐ கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறியத்தருகையில்,
“இந்த ஆண்டில் இன்றைய தினம் வரையில் 76,086 பேர் டெங்கு நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,125 ஆகும்.
அதற்கமைய, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில், 35,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேல் மாகாணத்தில் 7,593 பேர் டெங்கு நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு, டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் காணப்படுமாயின் அவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.